தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவரும் நிலையில் இவை அனைத்திற்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. தற்போது இத்தகைய முக்கிய ஆவணத்தை ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து விண்ணப்பித்து பெற முடியும். அத்துடன் ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலும் ஆன்லைன் மூலமாக மீண்டும் பெற்று விடலாம்.

இதற்கு முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டேன் லாகின் செய்ய வேண்டும் .

அதன் பிறகு tnpds ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடும் ஆப்ஷனை தேர்வு செய்து அதில் கேட்கப்படும் விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.

மேலும் விவரங்களை பிடிஎப் பதிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதனை உங்கள் ரேஷன் கார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்து மீண்டும் ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது