
பீடி, சுண்ணாம்புக்கல், சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
1 ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 25,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளும் உயர்கல்வி மாணவர்கள் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.