
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பில் சேர மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனரகம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்ட, பட்டம் ஏற்ப்படிப்பு மற்றும் முதல் நிலை படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினருக்கு 200, எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் ஆகும். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.