இந்தியாவில் சுயதொழில் தொடங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடன் உதவி வழங்கி வருகிறது. தற்போது மக்கள் அலுவலகங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழில் முனைவதில் தான் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதை ஊக்குவிக்கும் விதமாக தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் கொடுப்பதற்காக பிரதமர் முத்ரா யோஜனா என்ற திட்டம் பயன்பாட்டில் உள்ளது.. இந்த திட்டத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. வணிகம், சேவை தொழில்கள் போன்றவர்களுக்கு மட்டுமே  தொழில் கடன் கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு முகவரி சான்று ,அடையாள அட்டை, எஸ் சி/ எஸ் டி/ ஓ பி சி/ சிறுபான்மையினர் சான்றிதழ், நிறுவனத்தின் அடையாள சான்று ,கடந்த ஆறு மாத வங்கி அறிக்கை, கடந்த இரண்டு வருடங்களுக்கான பேலன்ஸ் சீட், நிதி நடப்பு நிதி ஆண்டு விற்பனை விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஷூசு கடன் மூலம் 50,000 வரையும், கிஷோர் கடன் மூலம் 50,000 , தருண்  கடன் மூலம் 10 லட்சம் ரூபாய் வரையும் பெற்றுக் கொள்ளலாம்.