துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 12-ஆம் தேதி திங்கட்கிழமை சிலர் தொழுகை முடித்து அருகில் உள்ள ஹோட்டலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த கத்தியால் அங்கு இருந்தவர்களை குத்தினார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசரை கண்டு அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு செய்தி முகமை கூறுகையில், “தாக்குதல் நடத்திய அர்தா கே என்ற நபர் கத்தி, கோடாரி, குண்டு துளைக்காத உடை மற்றும் சிறிய கேமரா ஆகியவற்றை தனது சட்டையில் வைத்திருந்தார். ஆனால் அவர் கொண்டு வந்த கோடரியை பயன்படுத்தியதாக தெரியவில்லை.

அவர் தாக்குதலை சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பி உள்ளார். தாக்கப்பட்ட 5 பேரில் இருவர் மட்டும் தீவிர நிலையில் மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது,” என்றனர். தாக்குதல் நடத்திய நபர் வீடியோ கேம்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.