
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலந்துறையில் ஏற்பட்ட பரிதாபமான சம்பவம் ஒன்று அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாவித்திரி, விஜயா, மங்களம், கண்ணம்மா ஆகியோருக்கு சொந்தமான 40 ஆடுகள், வாழை தோட்டத்தில் குடிநீர் தேடி சென்றபோது, அங்கு உரம் கலந்து இருந்த தண்ணீரை தவறுதலாக குடித்ததால் உடனே நச்சு விளைவுகள் ஏற்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்தன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறை மற்றும் கால்நடைதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதிக அளவில் ஆடுகள் இறந்ததால், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உரம் கலந்த தண்ணீரை திறந்து விட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.