மதுரை மாவட்டம் அதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோயல். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் அழுகிய நிலையில் நாயும், பன்றியும் கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் ஜோயலின் தோட்டத்திற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் திண்டுக்கல்லைச் சேர்ந்த மணி மற்றும் ராமையா என்பது தெரியவந்தது. பின்னர் சோதனை செய்ததில் அவர்களிடம் 31 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணியையும், ராமையாவையும் கைது செய்தனர்.