ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று டெல்லி அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக சந்தித்த இரண்டாவது தோல்வி இதுவாகும்.  இதற்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ் தோனியின் பெற்றோர் கண்டுகளித்தார்கள். 2008 ஆம் வருடம் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து  நேற்று முதல்முறையாக  போட்டியை பார்க்க வந்திருந்தார்கள். ஒருவேளை எம்.எஸ். தோனி ஓய்வுரை குறித்து முடிவை அறிவிக்கலாம்.

இதனால் தான் பெற்றோர்கள் வந்து கடைசி போட்டியை பார்க்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தீயாய் வதந்தி பரவி வந்தது. ஆனால் அதுகுறித்து எதுவுமே அறிவிக்கவில்லை. இந்த நிலையில்,  சிஎஸ்கே அணியின் ஆலோசகர் ஸ்டீபன் பிளமிங், எம் எஸ் தோனி இன்னும் வலிமையாக சென்று கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவருடைய எதிர்காலம் குறித்து கேட்பதில்லை என்று கூறியுள்ளார். இதனால் எம்.எஸ். தோனி இந்த தொடர் முழுவதும் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.