இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரருமான  மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை பெரும்பாலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டெல்லிக்கு எதிரான போட்டியின் போது தோனியின் பெற்றோர்கள் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு பார்த்தார்கள். அதே நேரத்தில் அவருடைய மனைவியும், மகள் ஆகியோரும் வந்து தோனிக்கு உற்சாகமூட்டினார்கள்.

தோனியின் மகள் ஷிவா தோனி பிப்ரவரி 6, 2015 அன்று பிறந்தார். இவர் ராஞ்சியில் பள்ளிக்குச் செல்கிறார். அங்குள்ள டாரியன் வேர்ல்ட் பள்ளியில் பயின்று வருகிறார். இந்த பள்ளி 2008 ஆம் வருடம் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்சின் முன்னாள் மாணவரான தி யோகரின் அமித் பஜ்வாவால் நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வருட கட்டணம் தோராயமாக 4.40 லட்சம் .அதே சமயம் 11 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கட்டணங்கள் சீருடைகள், பாடக புத்தகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உட்பட 4.80 லட்சம் ஆகும்.