
2024 ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் அதில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. சிஎஸ்கே அணி தோல்வியை தழுவிய நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறி விட்டதால் தோனி அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு குறித்த கேள்விக்கு மீண்டும் விளையாடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் பதில் அளிப்பார் தோனி. ஆனால் நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் பேட்டி எதுவும் கொடுக்காமலேயே சென்று விட்டார். சிஎஸ்கே ரசிகர்கள் அவர் அடுத்த ஆண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர்.