சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை தமிழக வெற்றிக்கழகம் நேற்று நடத்திய நிலையில் மாலையோடு நிறைவடைந்தது. காலை முதல் மாணவிகளுக்கு பரிசுகளை அளித்து வந்த விஜய் அவர்களுக்கு சால்வை அளித்து மரியாதை செய்து அவர்களோடு போட்டோவும் எடுத்துக் கொண்டார். இந்த சூழலில் மரியாதை செய்து மாணவி ஒருவரோடு போட்டோ எடுக்க விஜய் அவருடைய தோள் மீது கை வைத்த நிலையில் மாணவி சட்டென்று கையை எடுக்க சொல்லியுள்ளார் .

தோலில் இருந்து கையை எடுக்க சொன்ன அந்த மாணவி விஜயின் கையை பிடித்துக் கொண்டுள்ளார் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவிகளுக்கு விஜய் வைரக் கம்மல் பரிசாக அளித்திருக்கிறார். அதேபோல நாங்குநேரி மாணவன் சின்ன துரையையும் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.