சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முகமது சுகைல் ‌(22) என்பவர் முதலாமாண்டு எம்பிஏ படித்து வந்துள்ளார். இந்த மாணவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பப்புக்கு தன்னுடைய தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு அவர் உற்சாகமாக தன் தோழிகளுடன் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். அந்த மாணவர் இறந்ததற்கான காரணம் தெரியவரவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.