ஆந்திராவில் சின்ன திப்பமா என்ற 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒரு விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தோழி ஒருவர் சில நாட்களாக சின்ன திப்பமாவுடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு நேற்று புத்தாண்டு பண்டிகைக்கும் தன் தோழி வாழ்த்து கூறாததால் சிறுமி வேதனையில் இருந்துள்ளார். இதனால் பள்ளி வளாகத்தில் அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.