
சத்தீஸ்கர் மாநிலம் கச்சப்பால் கிராமத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கச்சப்பால் கிராமம் அருகே இருக்கும் வனப்பகுதியில் வைத்து நக்சல்கள் படைவீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காசிராம் மன்ஜி மற்றும் ஜானக் பட்டேல் என இரண்டு மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இரண்டு வீரர்களும் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.