
இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு நக்சல்கள் இருக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் சீமான் நக்சல் என்பது ஒரு புனிதமான வார்த்தை என்று கூறி விவாதத்தை தூண்டியுள்ளார். இது தொடர்பாக சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் போற்றுவது, மதம் சார்ந்த நலன்களை மட்டுமே பேசுவதை விடவா நக்சல் என்ற வார்த்தை கொடியது. நக்சல் என்பது ஒரு புனிதமான வார்த்தை. போராளிகள் உருவாவதற்கு காரணம் பசி மற்றும் வலி தான். விடுதலை 2 படத்தில் நக்சல்கள் காட்டப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
ஒரு போராளி கட்டுவதற்கான காரணத்தை விட்டுவிட்டு அவன் கத்துகிறான் என்று மட்டும் கூறுவது எந்த விதத்தில் நியாயம். பிரிவினைவாதி, நகர்புற நக்சல், மாவோயிஸ்டு மற்றும் தீவிரவாதி என்று பலவிதமாக குற்றம் சாட்டும் நிலையில் இவர்கள் தோன்றியதற்கு என்ன காரணம் என்பதை யாரும் யோசிக்கவில்லை. அரக்கமணம் மற்றும் இரக்கமற்ற குணம் கொண்டதுதான் அதிகாரம். அதிகாரத்திற்கு காதுகள் இல்லாத நிலையில் அது பெரிய வாயுடனும், நீண்ட கால்களுடனும் கண்ணீர் இல்லாத கண்களுடனும் இருக்கிறது. இந்த கால்களை வைத்து தான் அதிகாரம் மிதித்து நசுக்குகிறது. மேலும் நக்சல் என்ற விமர்சனம் அதிகாரம் செலுத்தும் கூட்டத்தினரின் மொழி என்பதால் அவர்கள் அப்படித்தான் விமர்சிப்பார்கள் என்றார்.