
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் சமீபத்தில் தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிஸியான நடிகராக இருக்கும் நிலையில் அரசியலிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் நடிகர்களை கூத்தாடிகள் என்று சொல்வது பற்றி வேதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நடிகர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுவே தேவைப்படவில்லை எனில் அவர்களை கூத்தாடி என்கிறார்கள். அதன்பிறகு எனக்கு எப்போதுமே வயசாகாது. தேசிய விருது வாங்கும் அளவிற்கு என்னுடைய மனைவியை வைத்து நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன். அதன் பிறகு சூரிய வம்சம் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை ஆர்.பி. சவுத்ரி வெளியிடுவார் என்றார். மேலும் நடிகர் விஜயை கூத்தாடிகள் என்று சமீப காலமாக அரசியல் கட்சியில் இருப்பவர்கள் விமர்சிக்கும் நிலையில் தற்போது அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் சரத்குமார் இப்படி பேசியுள்ளதாக கூறப்படுகிறது.