தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த லைலா தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்து வரும் லைலா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் லைலா கலந்து கொண்டார். அப்போது அவர் வித்தியாசமான கதைகளில் நடிக்க விருப்பப்படுவதாக தெரிவித்தார். அதோடு நெகட்டிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புவதாகவும், திரில்லர் மற்றும் க்ரைம் போன்ற கதைகளில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

அவரிடம் அஜித் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை பார்த்து உள்ளீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரமில்லாததால் அந்தப் படத்தை பார்க்க முடியவில்லை என்றார். மேலும் நடிகர் அஜித்துடன் சேர்ந்து தீனா உள்ளிட்ட படங்களில்  லைலா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.