தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் நிலையில் அனிருத் இசை அமைக்கிறார். அதன்பிறகு நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இதே போன்று ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் டீசர் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்றும் பட குழு அறிவித்துள்ளது.