
பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார். சென்னையை சேர்ந்த இவர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட நாடகங்கள், 15 டிவி சீரியல்கள் மற்றும் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர்கள் வடிவேலு மற்றும் விவேக் உடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருப்பார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழந்த நிலையில் இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.