தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர்சி. இவர் தற்போது கே. திருஞானம் இயக்கத்தில் ஒன் 2 ஒன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் வர்மன் மற்றும் நீது சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்த சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.