தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருடைய நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஜெயம் ரவியிக்கு திருமணம் ஆகி ஆர்த்தி என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கும் நிலையில் ஆர்த்தி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் ஆர்த்தியிடம் ரசிகர் ஒருவர் இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று கேட்க உடனடியாக அவர் தன்னுடைய கணவரின் மடியில் இருக்கும் போட்டோவை வெளியிட்டார். மேலும் அந்த போட்டோவை விஜய் தான் எடுத்ததாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.