தமிழ் சினிமாவில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். இவர் திரைப்படங்களில் பணிபுரிவதற்கு முன்பாக டெல்லி ஏர்போர்சில் விமானப்படை அதிகாரியாக வேலை பார்த்தவர். பின்னர் டெல்லி நாடக குழுவில் இணைந்து அதன் பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவர் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருடைய உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தற்போது தகனம் செய்யப்பட்டது. அவருடைய உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய இறுதிப் பயணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் அவருடைய உடலுக்கு முன்னதாக இந்தியன் AIR FORCE சார்பில் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.