தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரேணு தேசாய். இவர் தமிழ் சினிமாவில் பார்த்திபன் மற்றும் நடிகர் பிரபுதேவா நடித்த ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2 குழந்தைகள் பிறந்தனர். அதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு பவன் கல்யாண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ரேணு தேசாய் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இவ்வளவு நாள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பது ஆக அறிவித்துள்ளார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரேணுதேசாய்க்கு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பின்னர் திருமணத்தை நிறுத்திவிட்டார். தற்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் அவர்கள் உங்களுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளுமாறு ரேணுதேசாயிடம் கூறியுள்ளனர். மேலும் இதனால் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.