தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ராதா மோகன். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான மொழி திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரித்திவிராஜ் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்த நிலையில் படம் நல்ல வரவேற்பை‌ பெற்றது. இதைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா நடித்த அபியும் நானும் படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து நாகார்ஜுனா நடிப்பில் வெளியான பயணம், கடந்த வருடம் எஸ்.கே. சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ராதா மோகன் சட்னி சாம்பார் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் கயல் சந்திரன், வாணி போஜன், யோகி பாபு, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த வெப் தொடர் ஜாலியான குடும்ப பொழுது போக்காக உருவாகியுள்ள நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சட்னி சாம்பார் தொடர் வெளியாக இருக்கிறது. மேலும் தற்போது இந்த தொடரின்  டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.