நடிகர் தனுஷின் மாரி உட்பட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார் ரோபோ சங்கர். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் புதிய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உடல்நிலை சரியில்லாமல் உடல் எடை குறைந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், ரோபோ சங்கர் தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இன்று புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் உடல் எடை மிகவும் குறைந்து, மெலிந்த நிலையில் இருக்கிறார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து பல சர்ச்சையான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் ரோபோ சங்கரை மிமிக்கிரி கலைஞராக இருக்கும் போது தெரியும். என்னோடு நல்ல பழக்கம். டயட் மற்றும் உடற்பயிற்சியினால் தன்னுடைய உடம்பை அழகாக வைத்திருந்தார். பின்னர் இவர் நண்பர்களோடு இணைந்து மது அருந்துவதே காலப்போக்கில் அவரை அடிமை ஆக்கியது. இந்த பழக்கத்தினால் இவர் பல நாட்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனுடன் தான் இவருக்கும் மஞ்சள் காமாலை நோயும் வந்தது. இவர் உடலை பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.