
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த். இவர் 90களில் பிரபலமான ஒரு முன்னணி நடிகர் ஆவார். வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் செம்பருத்தி ,ஜீன்ஸ், மஜ்னு, வின்னர், ஹலோ போன்ற பல படங்களில் வெற்றியை கண்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இவர் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாகா நடித்திருக்கிறார்.
இந்தப் படம் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அந்த தூண் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.அதோடு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கார்த்திக், சிம்ரன் வனிதா, கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் என்ற திரைப்படமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.