தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் காலை கோவை வந்த நிலையில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில் நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று மாலை தற்போது பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ள நிலையில் நடிகர் விஜய் ஹோட்டலில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு காரில் புறப்பட்டார்.

அவரை ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது பைக்கில் சில தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சென்ற நிலையில் அவர்கள் நடிகர் விஜயின் காரை நெருங்க முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த தொண்டர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.