
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு நிகராக கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் அதனை ஒவ்வொரு முறையும் தளபதி படம் ரிலீஸ் ஆகும்போது வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தற்போது நடிகர் விஜயை காண்பதற்காக அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு நடைப்பயணம் தொடங்கியுள்ளார். அதாவது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கலம் அணை பகுதியில் உன்னி கண்ணன் என்ற 33 வயது நபர் வசித்து வருகிறார்.
இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகராக இருக்கும் நிலையில் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்பது இவருடைய கனவு. இதற்காக அவர் அங்கிருந்தே சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் புத்தாண்டு பண்டிகையின் போது காலை 5.30 மணி அளவில் தன்னுடைய வீட்டில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார். இவர் கழுத்தில் மற்றும் கையில் விஜய்யின் புகைப்படத்தை வைத்துள்ளார். இவர் பல முறை விஜயை நேரில் சந்திக்க முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. மேலும் இதன் காரணமாகத்தான் தற்போது நடைப்பயணம் மூலமாக விஜயை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் விஜயை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பும் நோக்கத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கனவு நினைவாக வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.