
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தற்போது தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்பாக சென்னையில் இருந்து காலை கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஒரே நேரத்தில் 2000 க்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
நடிகர் விஜய் ஏர்போர்ட்டில் இருந்து ரோடு ஷோ நடத்திய வாரே சென்றார். அவர் திறந்த வெளி வாகனத்தில் சென்ற நிலையில் அவருக்கு தொண்டர்கள் செல்லும் வழியெல்லாம் வரவேற்பு கொடுத்தனர். அதோடு சில தொண்டர்கள் பிரச்சார வாகனத்தின் மீது ஏறியதால் பரபரப்பு நிலவியது. இருப்பினும் நடிகர் விஜய் தெரிந்த முகத்துடன் அவர்களுக்கு துண்டை போட்டு மகிழ்வித்தார்.
இந்நிலையில் நடிகர் விஜயை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் புஸ்ஸி ஆனந்திற்கு கூட்ட நெரிசலில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. அதாவது அவருக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஆம்புலன்ஸ் சென்ற நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் தற்போது புஸ்ஸி அனந்த் நலமுடன் இருக்கிறார்.