தமிழ் சினிமாவில் கோலி சோடா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் மில்டன். இவர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோலிசோடா 2 வெளியானது. அதன் பிறகு அவர் தமிழ் படத்தை இயக்காத நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் சமீபத்தில் டீசர் வெளியானது. மேலும் இதைத்தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.