தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாடலை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.