தமிழ் சினிமாவின் பிரபலமான முன்னணி நடிகராக விளங்குபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜோசன் சஞ்சய் கடந்த ஆண்டு இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் ஒன்று இயக்க போவதாக கடந்த வருடமே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் லைக்கா நிறுவனம் சஞ்சய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கூறிய பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.

தற்போது சஞ்சய் இயக்கப்போகும் படத்திற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஹீரோவாக நடிகர் கவின் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்தது. அதன்பின் அந்த தகவல் உண்மை இல்லை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் இயக்கியுள்ள படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அதிதி சங்கர் நடிக்கப் போவதாகவும் ஏ. ஆர்.அமீன் இசையமைக்க உள்ளார் எனவும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்தன.

அதன்பின் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை இல்லை என்றும் இது அனைத்தும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோ, ஹீரோயின் பற்றி படக்குழுவினர் விரைவில் தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.