
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலி ப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தளபதி 67 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் நடிகர் விஜய் இருவருமே நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.
நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நடிகர் ஷாருக்கான் விஜய் மிகவும் இனிமையானவர். அமைதியானவர். எனக்கு அருமையான நண்பர். இரவு உணவு வழங்கினார் என்று பதில் அளித்தார். மேலும் இது தொடர்பான டுவிட்டர் பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
He is too sweet and quiet. Fed me lovely dinner also…. https://t.co/Q1lcohsnYo
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023