
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் துல்கர் சல்மான். இவர் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சீதாராமன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது.
அந்த சமயத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் துல்கர் சல்மானை ஒப்பிட்டு பேசி சில விஷயங்கள் வெளியானது. இதற்கு துல்கர் சல்மான் சீதாராமன் படத்தின் ஹிந்தி பதிப்பின் போது விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் படத்திலும் சரி நிஜத்திலும் சரி நடிகர் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய ரசிகன். அவர் அனைவருக்கும் ஒரு பெரிய முன்னுதாரணம். எனவே என்னை அவருடன் ஒப்பிட்டு பேசுவது அவருக்கு அவமானம் போன்றது. ஏனெனில் ஒரே ஒரு ஷாருக்கான் மட்டும்தான் இருக்க முடியும் என்று கூறினார். மேலும் அவர் கூறிய இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.