தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலமாகவும் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு வெற்றியை தேடி தந்தது. வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இவர் குறித்து பேசிய பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், 96 படத்தில் நடிக்கும் பொழுது விஜய் சேதுபதி திரிஷாவை இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறார் என்று வதந்தியான தகவல் வெளியானது.  ஆனால் விஜய் சேதுபதி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி அவரோடு நடக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பார். இதுதான் அவருடைய பலவீனம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுவதாக கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.