
பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஹிந்தி நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய போவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனியாக வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து வாங்க போவதாக தகவல் பரப்பி வருகின்றனர். மேலும் அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் வெளியிட்டிருந்த விவாகரத்து குறித்த பதிவுக்கு லைக் செய்துள்ளார். மேலும் இதனால் மீண்டும் இவர்களது விவாகரத்து விவகாரம்பூதாகரமாக வெடித்துள்ளது.