தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த 12ஆம் தேதி இந்து முறைப்படி கோவாவில் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதே நாள் மாலை  கிறிஸ்டின் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது இவர் ஆண்டனி தட்டில் என்பவரை தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்து கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் முதலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக கிறிஸ்டின் முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் வெள்ளை நிற கவுனில் அழகாக இருக்கும் நிலையில் மோதிரம் மாற்றிக் கொள்கிறார்கள். பின்னர் இருவரும்  லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.