
பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சலீம் அக்தர். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் உடல்நல குறைவின் காரணமாக மும்பையில் உள்ள திருபாய் அம்பானி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இவர் ராணி முகர்ஜி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
அதாவது ஹிந்தியில் கடந்த 1997 ஆம் ஆண்டு ராஜா தி ஆயோகி பாரத் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ராணி முகர்ஜியையும், கடந்த 2005ஆம் ஆண்டு சந்த் ஷா ரோஷன் செக்ரா என்ற படத்தின் மூலம் நடிகை தமன்னாவையும் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து இவர் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இவர் நடிகர் பாபி தியோல், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.