பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவருடைய மகன் அர்ஜுன் கபூர். இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நிலையில் தன்னை விட வயது மூத்த மலைகா அரோராவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் பல வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் கபூர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது தான் தற்போது சிங்கிளாகத்தான் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதனால் அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோரா இருவரும் பிரிந்து விட்டது உறுதியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங்கில்  இருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 7 வருடங்களாக இவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் பிரிந்துள்ளனர். இதனை ஒரு பேட்டியில் நடிகை மலைக்கா அரோராவும் உறுதிப்படுத்தியுள்ளார்.