பிரபல நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மீரா ஜாஸ்மின் நடித்த ரன், சண்டைக்கோழி, புதிய கீதை, ஆயுத எழுத்து உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு துபாயில் வேலை பார்க்கும் ஆனில் ஜான் டைட்டஸ் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீனா ஜாஸ்மின் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். 42 வயதாகும் மீரா ஜாஸ்மின் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் ஒரு படத்திற்கு 50 முதல் 70 லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு 15 முதல் 22 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.