பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் புதிய படம் சிக்கந்தர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் அவர் முதன்முறையாக தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடியாக நடித்துள்ளார். இரண்டு பேருக்குமான 31 வருட வயது வித்தியாசம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மார்ச் 23 அன்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த விவகாரம் குறித்து சல்மான் கான் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது ஒரு பத்திரிகையாளர், ராஷ்மிகாவுடன் இருக்கும் வயது வித்தியாசம் பற்றி கேட்டபோது சல்மான் கான், “ஹீரோயினின் அப்பாவுக்கு பிரச்சனை இல்ல. நாளைக்கு இவருக்கு கல்யாணம் ஆயிடும், பிள்ளைகள் பிறக்கும், அப்போவும் இவங்க வேலை செய்யப்போறாங்க. அப்போ கணவரோட அனுமதி வாங்குவாங்கலே?” என நகைச்சுவை பதில் அளித்தார். மேலும், ராஷ்மிகாவை பெருமையாகப் புகழ்ந்த அவர், “அவங்க சிக்கந்தர் மற்றும்  புஷ்பா 2 ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றினாங்க. இரவு 9 மணிக்கு எங்களுடன் ஷூட்டிங்குக்கு வந்துடுவாங்க. காலை 6.30 மணி வரை வேலை செய்து, மீண்டும் புஷ்பா 2க்-குப் போயிருவாங்க. உடல் நலம் சரியிலபோதும்,  அவங்க எதையும் தவிர்க்கல” என்றார்.

இந்த படம், சல்மான் கான் மற்றும் தயாரிப்பாளர் சாஜித் நடியாட்வாலா ஆகியோரின் ‘கிக்’ படத்துக்குப்  இரண்டாவது கூட்டணி ஆகும். ஏஆர் முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் சத்யராஜ், ப்ரதீக் பபர், அஞ்சினி தவான் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட வயது வித்தியாச விவாதங்களுக்கு எதிராக நேரடியாக சல்மான்கான் பதிலளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் மார்ச் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.