தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளின் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் குபேரா, ஹிந்தியில் சிக்கந்தர், தெலுங்கில் புஷ்பா 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ராஸ்மிகாவின் டீ பேக் வீடியோக்கள் வெளியாகி  மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா புகார் கொடுத்ததோடு மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய விளம்பர தூதராக தற்போது ராஷ்மிகா மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் இவர் குறித்த டீ பேக் வீடியோ வெளியான நிலையில் அது குறித்து அவர் துணிச்சலாக பேசிய நிலையில் தற்போது அவரை விளம்பர தூதராக நியமித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நடிகை ராஷ்மிகா கூறும்போது சைபர் குற்றத்தால் நான் பாதிக்கப்பட்டவள் என்பதால் அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.