தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது டான்ஸ் மாஸ்டர் ஆன ராபரட்டை திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நடிகை வனிதாவுக்கு 2 முறை திருமணம் நடைபெற்ற நிலையில் மூன்றாவதாக பீட்டர் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் பீட்டர் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். இந்நிலையில் தன்னுடைய நீண்ட கால நண்பரான ராபர்ட் மாஸ்டரை தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அக்டோபர் 5-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது சரிவர தெரியவில்லை. மேலும் இது குறித்தான திருமண பத்திரிகை தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.