
தங்க நகை திட்டத்தின் மூலமாக நடிகை ஷில்பா ஷெட்டியும் அவருடைய கணவர் ராஜ்குந்த்ராவும் தன்னை மோசடி செய்து விட்டதாக வியாபாரி ஒருவர் புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி காவல்துறையினருக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குமார் ஆபாச படம் தயாரிப்பில் பண மோசடி, கிரிப்டோ ஊழல் என்று பல மோசடி வழக்குகளில் கைதானது குறிப்பிடத்தக்கது.