
பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வருவது வழக்கம். அந்த வகையில் கொட்டும் பனியில் நடுங்கும் நாய்க்குட்டிகள் நெருப்பில் குளிர் காயும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள் என அனைவருமே சிரமத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் மனிதர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறாமலும் கம்பளி, போர்வை போன்றவற்றை பயன்படுத்தி சமாளித்து விடுகிறார்கள். ஆனால் விலங்குகளின் நிலை சற்று கவலையை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அந்த வகையில் கொட்டும் பனியில் குளிர் தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருக்கும் நாய் குட்டிகள் நெருப்பில் குளிர் காய்கிறது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு இவ்வாறு நெருப்பு மூட்டிவிட்ட மனிதர்களின் குணத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
View this post on Instagram