
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான யானையை பாகன் நேற்று மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அண்டுகோடு பகுதியில் யானை உரிமையாளரின் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் வைத்து யானைக்கு தென்னை ஓலை, பிற பொருட்களை கொடுத்துவிட்டு மாலையில் பாகன் யானையை திரும்ப திற்பரப்புக்கு அழைத்து வந்தார். அந்த பாகன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நடுரோட்டில் சென்ற போதே பாகன் யானை மீது படுத்து தூங்கிவிட்டார். அவரது கையில் இருந்து கீழே விழுந்த அங்குசத்தை எடுத்து யானை பாகனிடம் கொடுத்தது. ஆனால் அவர் அங்குசத்தை வாங்காததால் யானை சாலை ஓரமாக அப்படியே நின்றது.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று யானை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மது போதையில் தூங்கிய பாகனை இறக்க பல முயற்சிகள் செய்தனர். ஆனால் அவர் இறங்கவில்லை. போதை தெளிந்து சிறிது நேரம் கழித்து கீழே இறங்கினார். இதனையடுத்து வனத்துறையினரும் உரிமையாளரும் யானையை வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால் பாகன் இல்லாமல் யானை வாகனத்தில் ஏற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அறுமனை வழியாக திற்பரப்புக்கு யானையை நடத்தி கூட்டி சென்றனர். இந்த சம்பவம் குறித்து யானை உரிமையாளர் மற்றும் பாகன் மீது வனத்துறையினர் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம்- அருமனை அருகே குடிபோதையில் யானையின் மேல் படுத்து உறங்கிய பாகன்.
யானையை பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரணை#Kanyakumari #KanniyaKumari #Elephant #Forest pic.twitter.com/AXrTXvopaT
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) March 11, 2025