இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அவர்கள் சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை கூட யோசிக்காமல் செய்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் வீடியோ எடுப்பதோடு சிலர் பொது இடங்களில் அத்துமீறியும் நடந்து கொள்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு பெண் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த நிலையில் அவருடைய கணவர் போலீஸ் வேலையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

 

இந்நிலையில் புனேவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் வாகனங்களுக்கு நடுவே திடீரென ஒரு ஜோடி கட்டிப்பிடித்தபடி நின்று கொண்டிருந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர்களை சுற்றி நின்று வாகன ஓட்டிகள் பார்த்தனர். பின்னர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் லைக் வாங்குவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து  தெரிவித்து வரும் நிலையில் ஒரு பயனர் இது மராட்டி சினிமா சூட்டிங் போல இருக்கு என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.