உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் ஒருவர் தனது காதலியை பயங்கரமாக தாக்கியுள்ளார். அந்த நபர் ஒரு கையால் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் அவரது முகத்தில் பலமாக அடிக்கிறார். அந்த பெண் அழுது கொண்டே நிற்கிறார்.

இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை இழுத்துச் செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் சூர்யா பதானா என்பது தெரியவந்தது. அவர் எதற்காக இளம்பெண்ணை தாக்கினார் என்பது தெரியவில்லை. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.