இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் ‌ரீல்ஸ் மோகம் மிகுந்து காணப்படுகிறது. இந்த ரீல்ஸ் மோகத்தால் பலர் விபரீதமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இதனால் பல சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் கூட அரங்கேறுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு முதியவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த முதியவரின் முகத்தில் திடீரென ஸ்பிரேவை அடித்துவிட்டனர். இதனால் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த முதியவர் திகைத்துப் போய்விட்டார். இப்படி முகத்தில் நடுரோட்டில் செல்லும்போது ஸ்பிரே அடித்த நிலையில் ஒருவேளை அந்த முதியவர் தடுமாறி கீழே விழுந்தால் விபத்து ஏற்பட்ட அவர் உயிரைப் போகும் நிலை கூட ஏற்படும். மேலும் இதைப்பற்றி எல்லாம் சற்றும் சிந்திக்காமல் வாலிபர்கள் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயல்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருவதோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.