சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் யோகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தையின் காரை எடுத்துக்கொண்டு புது வண்ணாரப்பேட்டைக்கு சென்றுள்ளார். இவர் டோல்கேட் அருகே சென்றபோது திடீரென அவருடைய காரில் ‌ இருந்து கரும்புகை வெளியேறியது. அதன் பிறகு சற்று நேரத்தில் கார் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக யோகராஜ் காரின் நிறுத்திவிட்டு வெளியே ஓடிவிட்டார்.

அதிஷ்டவசமாக அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.